ஜி20 மாநாடு: குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்தில் இசை நிகழ்ச்சி

புது தில்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலக தலைவர்களுக்கு இசைக் கருவிகளைக் கொண்டு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜி20 மாநாடு: குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்தில் இசை நிகழ்ச்சி


புது தில்லி: இந்தியாவின் கலாசாரத்தை பறைசாற்றும் வகையில், புது தில்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலக தலைவர்களுக்கு இசைக் கருவிகளைக் கொண்டு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல் முறையாக, இதுபோன்றதொரு இசை நிகழ்ச்சி நடத்தப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய இசைப் பயணம் என்ற பெயரில், நாட்டில் உள்ள பல்வேறு இசைக் கருவிகளைக் கொண்டு இந்த இசை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இதற்கு இந்திய கலாசாரத் துறையின் கீழ் இயங்கும் சங்கீத நாடக அகாதெமி ஏற்பாடு செய்திருக்கிறது.

குடியரசுத் தலைவர் மாளிகையில், ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கவிருக்கும் உலக தலைவர்களுக்கு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அளிக்கும் இரவு விருந்து நிகழ்ச்சியின்போது, 78 இசைக் கலைஞர்களைக் கொண்டு மூன்று மணி நேரம் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

34 இந்துஸ்தானி இசைக்கரவிகள், 18 கர்நாடக இசைக் கருவிகள், 40 ஃபோல்க் இசைக்கருவிகள் என நாட்டின் பல்வேறு நாடுகளிலிருந்து 11 குழந்தைகள், 13 பெண்கள், 7 மாற்றுத் திறனாளிகள், 26 இளைஞர்கள், 21 மூத்தக் குடிமக்கள் என 78 இசைக் கலைஞர்கள் பங்கேற்கவிருக்கிறார்கள்.

ஜி20 தலைவா்களின் உச்சி மாநாடு வரும் செப்டம்பா் 9-10 வரை தில்லி பிரகதி மைதானில் புதிதாக கட்டப்பட்ட சா்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையமான பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com