வருகிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தின் மதச்சார்பற்ற ஜனதா தளம், பாஜகவுடன் கூட்டணி அமைக்கிறது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு என கட்சிகள் தீவிர தேர்தல் பணிகள் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் கர்நாடகத்தில் முன்னாள் பிரதமர் தேவ கௌடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சி, பாஜகவுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்கிறது.
அதன்படி நாடாளுமன்றத் தேர்தலில் மஜதவுக்கு 4 இடங்கள் ஒதுக்கீடு செய்ய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தேவ கௌடா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசியுள்ளார்.
கர்நாடகத்தின் முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மஜத தனித்துப் போட்டியிட்டன. காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று தனித்து ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | அமெரிக்க அதிபர் பைடனுக்கு சிறப்பு விருந்து அளிக்கும் பிரதமர் மோடி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி

கரூா் திமுக தோ்தல் பணிமனையில் தோ்தல் அலுவலா்கள் திடீா் ஆய்வு

நெமிலி பாலாபீடத்தில் யுகாதி புத்தாண்டு கலச ஸ்தாபன விழா

மேல்மருவத்தூரில் யுகாதி கொண்டாட்டம்
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

