பலரை கோடீஸ்வரர்களாக்கிய தக்காளிக்கு வந்த பரிதாப நிலை

கடந்த இரண்டு மாதங்களாக, இரட்டைச் சதமடித்து, பலரையும் கோடீஸ்வரர்களாக்கிய தக்காளிக்கு,  மீண்டும் குப்பையில் கொட்டும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
பலரை கோடீஸ்வரர்களாக்கிய தக்காளிக்கு வந்த பரிதாப நிலை
Published on
Updated on
1 min read

விசாகப்பட்டினம்: கடந்த இரண்டு மாதங்களாக, விலையில் இரட்டைச் சதமடித்து, பலரையும் கோடீஸ்வரர்களாக்கிய தக்காளிக்கு,  மீண்டும் குப்பையில் கொட்டும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு மாதத்துக்கு முன்பு, கிலோ ரூ.200க்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்பட்டு, வாங்குவோர் கண்களில் ரத்தக் கண்ணீர் வரவழைத்த தக்காளி, அதிக விளைச்சல் காரணமாக, தற்போது விலை குறைந்தது.

விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ தக்காளி ரூ.3 கிலோவுக்கு கொள்முதல் செய்யும் பரிதாப நிலை ஏற்பட்டதால், தக்காளியை வியாபாரிகளிடம் வண்டி வைத்து செலவு செய்து கொண்டுவந்து விற்பனை செய்வதைக் காட்டிலும் சாலையோரம் கொட்டிவிடலாம் என்று கருதிய விவசாயிகள், குவியல் குவியலாக சாலையோரம் கொட்டிச் செல்கிறார்கள்.

கடந்த ஒரு சில நாள்களாகவே, ராயலசீமா பகுதி தக்காளி விவசாயிகள், தங்கள் விளைநிலத்தில் விளைந்த தக்காளியை தொடர்ந்து சாலையோரத்திலேயே கொட்டிச்செல்கிறார்கள். மொத்த விற்பனையகத்துக்குக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்துச் செலவுக்குக் கூட பணம் கிடைக்காது என்பதால் விரக்தியில் விவசாயிகள் இவ்வாறு செய்து வருகிறார்களாம்.

கடந்த வாரங்களில், பல விவசாயிகள் கோடீஸ்வரர் ஆனதையும், கார் வாங்கியதையும், தக்காளிகள் கொள்ளை போனதையும், கடைக்காரர்கள் தக்காளிப் பெட்டியை கடைக்குள் வைத்துக்கொண்டு வியாபாரம் செய்ததையும் மாய்ந்து மாய்ந்து பேசியவர்கள், இன்று விவசாயிகளின் பரிதாப நிலையை கண்டுகொள்ளவில்லை என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com