ஜி20 மாநாடு: சர்வதேச நிதி அமைப்புகளை சீரமைக்க ஒப்புதல்!
ஜி20 மாநாடு தீர்மானம் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதனைத் தெரிவித்தார்.


சர்வதேச நிதி அமைப்புகளை சீரமைக்க ஜி20 கூட்டமைப்பின் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஜி20 மாநாடு தீர்மானம் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது அவர்கள் பேசியதாவது, தீர்மானம் குறித்து தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், சர்வதேச நிதி அமைப்புகளின் நம்பகமான நிலைத்தன்மை, ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
உலகளாவிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் யாரும் பின்ங்கியிருக்கக்கூடாது. இந்தியா தலைமையின் கீழ் ஆப்பிரிக்க யூனியன் ஜி20 அமைப்பின் நிரந்தர உறுப்பினரானது திருப்தி அளிக்கிறது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலத்தை பகிர்ந்து கொள்வோம் என்பதே ஜி20 கூட்டமைப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் அளிக்கும் தகவல் எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...