பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

அரிய மரபணு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உதவியவர்களுக்கு நன்றி: கேஜரிவால்

அரிய மரபணு கோளாறால் பாதிக்கப்பட்ட சிறுவனை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

News image
அரவிந்த் கேஜரிவால்
Updated On :12 செப்டம்பர் 2023, 10:05 am

DIN

அரிய மரபணு கோளாறால் பாதிக்கப்பட்ட சிறுவனை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் சிறுவனுக்கு உதவியவர்களுக்கு நன்றியும் தெரிவித்தார். 

கனவ் 18 மாதக் குழந்தை. ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி(எஸ்எம்ஏ) தசைகளைக் கட்டுப்படுத்தி நரம்பு செல்களை பாதிக்கும் மரபணு கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். நாட்டில் இதுபோன்ற ஒன்பது வழக்குகள் உள்ளன. தில்லியில் இதுவே முதல் நோய் பாதிப்பு. 

இந்த அரிய மரபணு கோளாறு நோய்க்கு சிகிச்சையளிக்க அமெரிக்காவில் இருந்து ஊசி கொண்டுவரப்பட்டதாகவும், க்ரவுட் ஃபண்டிங் மூலம் சிறுவனின் குடும்பத்தினர் சிகிச்சைக்காக ரூ.10.5 கோடி நிதி திரட்டினர். சிகிச்சைக்குப் பிறகு, கனவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, தற்போது குழந்தை நன்கு கை, கால்களை அசைக்கின்றன. 

விலையுயர்ந்த ஊசி செலுத்தியதற்கு எம்.பி.க்கள் உள்பட பலர் பணம் வழங்கி உதவியவர்களுக்கு முதல்வர் நன்றி தெரிவித்தார். மேலும், மருந்தை 10.5 கோடிக்கு விற்க ஒப்புக்கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த மருந்து உற்பத்தியாளருக்கும், மருந்துக்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளித்த மத்திய அரசுக்கு கேஜரிவால் நன்றி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.