விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஹைதராபாத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கியது!

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று(சனிக்கிழமை) மாலை ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது.

News image
Updated On :16 செப்டம்பர் 2023, 11:03 am

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று(சனிக்கிழமை) மாலை ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக மல்லிகாா்ஜுன காா்கே தோ்வு செய்யப்பட்ட பிறகு புதிய செயற்குழுவை அக்கட்சி அமைத்துள்ளது.

இதையடுத்து புதிய செயற்குழுவின் முதல் கூட்டம் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

நடப்பாண்டு இறுதியில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. 

Story image

காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் செயற்குழுவின் உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

செயற்குழுவின் விரிவான கூட்டம் நாளை(செப். 17) நடைபெறுகிறது. இதில் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களின் உள்ள காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள். இதற்கு 159 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் 149 பேர் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Story image

மேலும் நாளை தெலங்கானாவில் நடைபெறவுள்ள காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொதுக்கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.