காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகத்தில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வருகிறது.
கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்திலும் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாள்களுக்கு தினமும் 5,000 கன அடி நீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எனினும் கர்நாடக அரசு, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
அதில், தமிழகத்துக்கு காவிரி நீா் திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதனால் தமிழகத்துக்கு நீர் திறக்க வேண்டிய கட்டாயம் கர்நாடகத்துக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடகத்தில் பெங்களுருவில் பாஜகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று கூறி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே கர்நாடக விவசாயிகளும் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

