தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஒரே நாடு, ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் தலைமையில் முதல் கூட்டம் தொடங்கியது!

'ஒரே நாடு, ஒரே தோ்தல்' தொடர்பான முதல் உயர்நிலைக் குழு கூட்டம் இன்று(சனிக்கிழமை) நண்பகல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

News image
Updated On :23 செப்டம்பர் 2023, 7:43 am

DIN

'ஒரே நாடு, ஒரே தோ்தல்' தொடர்பான முதல் உயர்நிலைக் குழு கூட்டம் இன்று(சனிக்கிழமை) நண்பகல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

நாட்டில் மக்களவை, மாநிலப் பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது குறித்த சாத்தியக்கூறை ஆராய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டது. 

ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மக்களவை காங்கிரஸ் குழு தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி, மாநிலங்களவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் குலாம் நபி ஆசாத், சட்டத் துறைச் செயலா் நிதின் சந்திரா, சட்டம் இயற்றுதல் துறைச் செயலா் ரீட்டா வசிஷ்டா, முன்னாள் நிதி ஆணையத்தின் தலைவா் என்.கே.சிங் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். 

Story image

'இந்தக் குழுவுக்கு எந்தவித கால நிா்ணயமும் செய்யப்படாததால் இது வெறும் கண்துடைப்பு நடவடிக்கை’ என்று கூறி குழுவில் இருந்து விலகுவதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு அதீா் ரஞ்சன் செளதரி கடிதம் எழுதியிருந்தாா்.

இந்நிலையில் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் முதல் உயர்நிலைக் குழு கூட்டம் தில்லியில் இன்று(சனிக்கிழமை) நண்பகல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

Story image

ராம் நாத் கோவிந்த் தலைமையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குலாம் நபி ஆசாத், அரசியலமைப்பு நிபுணர் சுபாஷ் காஷ்யப் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். 

ஒரே நாடு ஒரே தோ்தலுக்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய சட்டத் திருத்தங்களை இந்தக் குழு பரிந்துரைக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.