மனநலம் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜையின் மாவட்டத்தில் அரை நிர்வாணமாக ரத்தம் வழிந்தபடி மக்களிடம் உதவி கேட்டு சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, யாரும் உதவ முன்வராத நிலையில் அப்பகுதியில் இருந்த தண்டி ஆஸ்ரமம் அருகே மயங்கி விழுந்துள்ளார்.
இந்த காட்சிகள் அனைத்தும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.
உடனடியாக ஆஸ்ரமத்தில் இருந்தவர்கள், அந்த சிறுமியின் ஆடைகளை சரிசெய்து அருகிலிருந்த அரசு மருத்துவமனையில் அனுமதித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
இதையும் படிக்க | நடனப் பயிற்சியின்போது மாரடைப்பு: 19 வயது இளைஞர் மரணம்!
அந்தச் சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாகவும், அவரின் உடலுறுப்புகளில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிவதாகவும் தெரிவித்தனர். மேலும், அந்தச் சிறுமி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதும் மருத்துவர்கள் பரிசோதனையில் தெரியவந்தது.
தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக போலீஸ் பாதுகாப்புடன் இந்தூர் அழைத்துச் செல்லப்பட்ட அந்த சிறுமிக்கு, உடன் சென்ற காவலர்கள் மருத்துவமனையில் ரத்தம் கொடுத்து உதவியுள்ளனர்.
தற்போது இந்தூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சிறுமியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல்கட்ட விசாரணையில் அந்த சிறுமி பிரயாக்ராஜ் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், உஜ்ஜையின் நகருக்கு எப்படி வந்தார் என்பதை அந்த சிறுமியால் விளக்க முடியவில்லை.
இந்த சம்பவம் குறித்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளைப் பிடிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் சச்சின் சர்மா தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மத்தியப் பிரதேசத்தில் செப்டம்பர் 6-ஆம் தேதி 13 வயது சிறுமி அவரது தந்தையால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், போக்ஸோ சட்டத்தின் கீழ் குற்றவாளி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.