எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தில்லி நகைக்கடை கொள்ளை: சத்தீஸ்கரைச் சேர்ந்த 2 பேர் கைது! 

தில்லியின் போகல் பகுதியில் உள்ள நகைக் கடையில் ரூ.20 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சத்தீஸ்கரின் பிலாஸ்பூரைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image
Updated On :29 செப்டம்பர் 2023, 7:37 am

DIN

தில்லியின் போகல் பகுதியில் உள்ள நகைக் கடையில் ரூ.20 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சத்தீஸ்கரின் பிலாஸ்பூரைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தில்லி போகல் பகுதியில் உள்ள உம்ராவ் சிங் ஜூவல்லா்ஸ் நகைக் கடையில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அடையாளம் தெரியாத  மூன்று பேர், அறையை துளையிட்டு இந்தக் கொள்ளையை நடத்தியுள்ளனர். இது தேசியத் தலைநகரில் பதிவான மிகப்பெரிய கொள்ளைச் சம்பவங்களில் ஒன்றாகும்.

இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு மற்றும் திங்கள்கிழமைக்கு இடையில் நடந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உம்ராவ் சிங் ஜூவல்லா்ஸ் கடை திங்கள்கிழமை மூடப்பட்டிருந்தது. செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் கடையைத் திறந்து பார்த்தபோது, ​​சம்பவம் குறித்து தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து சத்தீஸ்கரைச் சேர்ந்த இரண்டு பேரை போலீஸார் இன்று கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.