கோழிக்கோடு: கேரளத்தில் நிபா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்று வந்த 9 வயது சிறுவன் உள்பட நான்கு பேரும் குணமடைந்ததாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில், தற்போதைக்கு புதிதாக நிபா வைரஸ் பாதிப்பு எதுவும் கண்டறியப்படாத நிலையில், இந்த நல்ல தகவலை அமைச்சர் பகிர்ந்துகொண்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய வீணா ஜார்ஜ், நிபா பாதித்து சிகிச்சை பெற்று வந்த நான்கு பேருக்கும் இரண்டு முறை மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, இரண்டு முறையுமே நிபா தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுவிட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் மொத்தம் ஆறு பேருக்கு நிபா வைரஸ் பாதிக்கப்பட்டது. அதில் இரண்டு பேர் பலியான நிலையில், நான்கு பேரும் குணமடைந்துள்ளனர்.
ஆகஸ்ட் 30ஆம் தேதி நிபா வைரஸ் பாதித்து மரணமடைந்த நபர்தான், கேரளத்தின் முதல் நிபா நோயாளியாகக் கண்டறியப்பட்டார். அவரிடமிருந்துதான் மற்ற ஐந்து பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.