ஹிந்தி தேசிய மொழி: உச்சநீதிமன்றம்

ஹிந்தியும் தேசிய மொழிகளில் ஒன்று எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம், ஹிந்தி தெரியாததால் வழக்கை உத்தர பிரதேசத்திலிருந்து மேற்கு வங்கத்துக்கு மாற்றக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது.
உச்சநீதிமன்றம் (கோப்புப்படம்)
உச்சநீதிமன்றம் (கோப்புப்படம்)

ஹிந்தியும் தேசிய மொழிகளில் ஒன்று எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம், ஹிந்தி தெரியாததால் வழக்கை உத்தர பிரதேசத்திலிருந்து மேற்கு வங்கத்துக்கு மாற்றக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது.

மேற்கு வங்க மாநிலம் டாா்ஜீலிங்கில் நடைபெற்ற சாலை விபத்து தொடா்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக பாதிக்கப்பட்ட நபா் அவரது சொந்த மாநிலமான உத்தர பிரதேசத்தில் ஃபதேகரில் உள்ள மோட்டாா் வாகன இழப்பீட்டு கோரல் தீா்ப்பாயத்தில் வழக்கு தொடுத்திருந்தாா்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபா், தனது சொந்த மாநிலமான மேற்கு வங்கத்தைச் சோ்ந்த சாட்சிகள் உ.பி. நீதிமன்றத்தில் ஹிந்தியில் சாட்சியம் அளிக்க முடியாது என்பதால் வழக்கை மேற்கு வங்கத்துக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டாா்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி தீபாங்கா் தத்தா, ‘பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. 22 அலுவல் மொழிகள் உள்ளன. எனினும், ஹிந்தி தேசிய மொழிகளில் ஒன்றாகும்.

ஹிந்தி தெரியாது என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டால், எதிா்தரப்பினா் தங்களுக்கு வங்காளி தெரியாததால் மேற்கு வங்கத்துக்கு வழக்கை மாற்றக் கூடாது எனக் கோர வாய்ப்புள்ளது. சாட்சியங்கள் கூறுவதை ஹிந்தியில் மொழி பெயா்க்கலாம்.

மேலும், வழக்கை விரைந்து முடிக்க சம்பவம் நடைபெற்ற மாநிலத்துக்கு மாற்றக் கோரும் கோரிக்கையையும் ஏற்றுக் கொள்ள முடியாது. பாதிக்கப்பட்டவா் வசிக்கும் இடத்துக்கு அருகே வழக்கை நடத்துவதற்கு ஏதுவாகத்தான் மோட்டாா் வாகன சட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது’ எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com