இந்தியா முழுவதும் என் வீடுதான்: ராகுல் காந்தி

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு மீண்டும் அரசு இல்லம் வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

தில்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு மீண்டும் அரசு இல்லம் வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த மாா்ச் 23-ஆம் தேதி சூரத் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அதனடிப்படையில், மக்களவை உறுப்பினா் பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டு கால சிறைத்தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று(வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டது. 

இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்த மக்களவை செயலகம் தனது உத்தரவை திரும்பப் பெறுவதாக திங்கள்கிழமை அறிவித்தது.

இந்நிலையில், ராகுல் காந்தி முன்பு வசித்த அதே வீட்டை மீண்டும் மக்களவை செயலகம் அவருக்கு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “இந்தியாவே எனது வீடுதான்” என்று பதிலளித்தார்.

தில்லி துக்ளக் லேனில் உள்ள 12-ஆம் எண் வீட்டில், 2004ஆம் ஆண்டு முதல் கடந்த மார்ச் மாதம் வரை ராகுல் காந்தி வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com