நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

ராஜஸ்தானில் கடும் பனிப்பொழிவு!

ராஜஸ்தானின் சில இடங்களில் கடும் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.

News image

பிகானேர் பகுதியில் ஏற்பட்ட பனிப்பொழிவு | PTI

Updated On :1 டிசம்பர் 2023, 3:51 pm IST

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் பல இடங்களில் வெள்ளிக்கிழமை காலை கடும் பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாகவும் சில இடங்களில் மிதமான மழை பதிவாகியுள்ளதாகவும் அம்மாநில வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஜெய்ப்பூர் வானிலை மையத்தின் அறிக்கையின்படி, கோட்டா மற்றும் ஜெய்ப்பூரின் பகுதிகளில் மிதமான மழை பதிவானதாகவும் சுரு மற்றும் பிகானேர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிகானேர் மிருகக் காட்சி சாலையில்...| PTI

பிகானேர் மிருகக் காட்சி சாலையில்...| PTI

ஆல்வார் பகுதில் மிகக் குறைவான வெப்பநிலை 10.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

கோட்டாவின் சில பகுதிகளில் மற்றும் உதய்ப்பூர் உள்ளிட்ட கிழக்கு ராஜஸ்தானின் பகுதிகளில்  அடுத்த இரண்டு மூன்று நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: 

மாநிலத்தின் சில பகுதிகளில் கடும் பனிப்பொழிவு எதிர்பார்க்கலாம் எனவும் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குறையும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.