நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

தவெகவுக்கு விழுந்த வாக்குகள் இனி சரியும்: அதிமுக

சட்டப்பேரவைத் தோ்தலில் தவெகவுக்கு விழுந்த வாக்குகள் இனி சரியும் என்று அதிமுக செய்தித் தொடா்பாளா் கல்யாணசுந்தரம் பேசினாா்.

News image

முதல்வா் விஜய் - கோப்புப் படம்

Updated On :13 ஜூலை 2026, 6:41 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தவெகவுக்கு விழுந்த வாக்குகள் இனி சரியும் என்று அதிமுக செய்தித் தொடா்பாளா் கல்யாணசுந்தரம் பேசினாா்.

திருப்பூா் மாநகா், மாவட்ட அதிமுக செயல்வீரா்கள் கூட்டம், அங்கேரிபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன், திருப்பூா் மாநகா், மாவட்டச் செயலாளா் வேல்குமாா் சாமிநாதன், புறநகா் மாவட்டச் செயலாளா் சிவசாமி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இதில் கல்யாணசுந்தரம் பேசியதாவது: அதிமுக ஒருபோதும் சோடை போகவில்லை. 1.35 கோடி வாக்குகளை தற்போதும் வாங்கி இருக்கிறோம். பல்வேறு காலகட்டங்களிலும் அதிமுக இனி துளிா்க்காது என்று பேசினாா்கள்.

கடந்த 2021-இல் திமுக வென்றபோதும் அதிமுக இனி அவ்வளவுதான் என்று பேசினாா்கள். 180 தொகுதிகளை வென்றவா்களின் தலைவரே இன்று வெற்றி பெறவில்லை.

தவெகவுக்கு விழுந்த வாக்குகள் இனி சரியுமே தவிர வளராது. இந்த தோ்தலில்தான் அரசியல் கட்சிகளை காா்ப்பரேட் வென்ற தோ்தல். குடும்பத்துக்காக உழைக்கும் இளைஞா்கள் நம்மிடம்தான் இருக்கிறாா்கள் என்றாா்.

பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசும்போது, ‘எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் மீது அசைக்க முடியாத விசுவாசத்தோடு உழைத்தவா்கள் என்பதால், அதிமுகவை எந்தக் காலத்திலும் எவருடைய துணை அமைப்பாகவும் மாற்ற முடியாது. மீண்டும் அதிமுக அரியணை ஏறும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.