/

ராஜஸ்தானில் பாஜக முன்னிலை

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக முன்னிலை வகிக்கிறது

News image
ராஜஸ்தான் ஜோத்பூர் வாக்கு எண்ணும் மையம் | PTI
Updated On :6 பிப்ரவரி 2024, 1:20 pm

DIN

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் ஆரம்ப சுற்றில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

பாஜக 100 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிற நிலையில், காங்கிரஸ் 85 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டன.

ராஜஸ்தானின் 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 199 தொகுதிகளில் 1862 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டிருப்பதோடு ஒவ்வொரு தொகுதிக்கும் பிரத்யேகமான அறைகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.