தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய உதயநிதி ஸ்டாலின் மனு: இன்று தீா்ப்புஅரசுப் பள்ளிகளில் இன்று குழந்தைகள் தின கொண்டாட்டம்: மாணவா்களுக்கு கேக் வழங்குகிறாா் முதல்வா் விஜய்இந்தியாவின் ரஷிய எரிபொருள் இறக்குமதி: அக்டோபரில் ரூ.67,000 கோடியாக அதிகரிப்புபிகாரிலிருந்து சென்னைக்கு நவ. 17-இல் சிறப்பு ரயில்நவ.19-க்கு பிறகு வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புதைவானை முந்திய இந்தியப் பங்குச் சந்தை: ரூ.508 லட்சம் கோடி மதிப்புடன் உலக அளவில் 5-ஆவது இடம்

இலவச அரிசியை நம்பி வாழும் 81 கோடி மக்கள்: மாயாவதி குற்றச்சாட்டு 

மத்திய அரசின் தவறான நிர்வாகத்தால் நாட்டில் 81 கோடி பேர் இன்னமும் அரசின் இலவச ரேஷன் அரிசியை எதிர்பார்த்து வாழும் நிலையில்தான் உள்ளனர்.

Updated On :

மத்திய அரசின் தவறான நிர்வாகத்தால் நாட்டில் 81 கோடி பேர் இன்னமும் அரசின் இலவச ரேஷன் அரிசியை எதிர்பார்த்து வாழும் நிலையில்தான் உள்ளனர்; இதை சுதந்திரப் போராட்ட வீரர்களோ அல்லது சட்டமேதை அம்பேத்கரோ கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.

பிரதமரின் (பிஎம்ஜிகேஏஒய்) அன்னயோஜனா திட்டத்தில் கூடுதலாக  வழங்கப்படும் 5 கிலோ இலவச ரேஷன் அரிசி அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாட்டில் 81.35 கோடி மக்களுக்கு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கடந்த மாதம் அறிவித்திருந்த நிலையில் அதை விமர்சித்து மாயாவதி இவ்வாறு கூறியுள்ளார்.
அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 

அண்மைய நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகளைக் காணும்போது தேர்தல் நேரத்தில் இருந்த சூழ்நிலை வேறு; தேர்தல் முடிவுகள் வேறாக உள்ளன. இது மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயமாகும்.

நாட்டின் ஏழைகள், தொழிலாளர்கள், தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் என 140 கோடி மக்களின் தூதராக அம்பேத்கர் விளங்குகிறார். சமத்துவ அரசியலமைப்பின் சிற்பியாக பாரத ரத்னா பாபாசாகேப் பீமராவ் அம்பேத்கர் விளங்குகிறார்.

நாட்டில் இன்னமும் 81 கோடி பேர் அரசின் இலவச ரேஷன் அரிசியை எதிர்பார்த்து வாழும் நிலையில்தான் உள்ளனர் என்பதை சுதந்திரப் போராட்ட வீரர்களோ அல்லது சட்டமேதை அம்பேத்கரோ கனவிலும்  நினைத்திருக்க மாட்டார்கள். இது மிக மோசமான நிலைமை. பணவீக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் நாட்டில் வாழ வழியின்றி ஏழைகள், விவசாயிகள், சிறு வியாபாரிகள் துன்பத்தில் உள்ளனர். வருமானத்தை விட செலவு அதிகமாக உள்ளது.ஆனால்,  சரியான நபர் அரசியல் சாசனத்தை அமல்படுத்தியதன் விளைவாக நாட்டில் ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

நாட்டில் வாழும் 100 கோடி ஏழைகள், தொழிலாளர்கள், கல்வியறிவு அற்றோரை வலுப்படுத்தாமல் இந்தியாவை வளர்ந்த நாடாக்க முடியாது. அவர்களைத் தவிர்த்து இந்தியாவை வளர்ந்த நாடாக்க நினைக்கும் அரசின் கனவு தவறான கொள்கையாகும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில்  பகுஜன் சமாஜ் கட்சி ராஜஸ்தானில் 2 தொகுதிகளைக் கைப்பற்றியது. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஒரு தொகுதியையும் அக்கட்சி கைப்பற்றவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.