மகாராஷ்டிரத்தில் 10 மாதங்களில் 2,366 விவசாயிகள் தற்கொலை!

மகாராஷ்டிரத்தில் இந்தாண்டு 10 மாதங்களில் 2,336 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அமைச்சர் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

மகாராஷ்டிரத்தில் இந்தாண்டு 10 மாதங்களில் 2,336 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் துறை அமைச்சர் அனில் பைதாஸ் பாட்டீல் மாநிலங்களவையில் தெரிவித்தார். 

அமராவதி வருவாய் கோட்டத்தில் அதிகபட்சமாக 951 பேர் உயிரிழந்துள்ளனர் என்று காங்கிரஸ் உறுப்பினர் குணால் பாட்டீல் கேட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அமைச்சர் தெரிவித்தார். 

மாநிலத்தில் இந்தாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை 2,366 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக மகாராஷ்டிர அரசுக்கு அறிக்கை வந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். 

அறிக்கையின்படி, அமராவதி வருவாய் கோட்டத்தில் 951 விவசாயிகளும், சத்ரபதி சம்பாஜிநகர் கோட்டத்தில் 877, நாக்பூர் கோட்டத்தில் 257, நாசிக் கோட்டத்தில் 254, புணே கோட்டத்தில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர். 

தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் குடும்பத்துக்கு மாநில அரசு ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com