அமித்ஷா மக்களவையில் பேசாமல் தொலைக்காட்சியில் பேசிக் கொண்டிருக்கிறார்: ஜெய்ராம் ரமேஷ்

உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் எதுவும் பேசாமல், தொலைக்காட்சி சேனலில் பேசிக் கொண்டிருக்கிறார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் எதுவும் பேசாமல், தொலைக்காட்சி சேனலில் பேசிக் கொண்டிருக்கிறார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

டிசம்பர் 13-ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையின் பாா்வையாளா்கள் மாடத்தில் இருந்த இரண்டு இளைஞா்கள் எம்.பி.க்கள் அமரும் பகுதிக்குள் குதித்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினா். நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் இதேபோன்று புகைக் குப்பிகளை வீசி பெண் உள்பட இருவா் தாக்குதல் நடத்தினா்.

இவா்கள் அனைவரையும் பாதுகாப்புப் படையினா் கைது செய்து தில்லி போலீஸிடம் ஒப்படைந்தனா். நாடாளுமன்றச் சாலை காவல் நிலையத்தில் வைத்து அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் பற்றி உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றன. 

இந்நிலையில் இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தில் புகைக் குப்பி வீசி தாக்குதல் நடத்தப்பட்ட மிகவும் தீவிரமான பிரச்னை குறித்து உள்துறை அமைச்சர் விளக்கமளிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இது மிகவும் நியாயமான, சட்டப்பூர்வமான மற்றும் எளிமையான கோரிக்கையாகும். ஆனால் இதற்கு பொறுப்பான உள்துறை அமைச்சர் இதுகுறித்து எந்த விளக்கமும் நாடாளுமன்றத்தில் அளிக்கவில்லை. 

நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து மக்களவையில் எதுவுமே பேசாத உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைக்காட்சி சேனலில் பேசிக் கொண்டிருக்கிறார். 

நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பேச விருப்பம் இல்லாததால்தான் அவை மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com