கேரளத்தில் மேலும் 292 பேருக்கு கரோனா தொற்று, 3 பேர் பலி

கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 292 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்று பாதித்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்
கேரளத்தில் மேலும் 292 பேருக்கு கரோனா தொற்று, 3 பேர் பலி
Published on
Updated on
1 min read


திருவனந்தபுரம்: கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 292 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்று பாதித்த 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று  புதன்கிழமை மத்திய சுகாதார அமைச்சக இணையதளத்தில் தரவுகள் தெரிவிக்கின்றன.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதன்கிழமை காலை 8 மணி வரை, புதிதாக 341 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 292 கேரளத்தை சேர்ந்தவர்கள்ர், மாநிலத்தில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2,041 ஆக உள்ளது என்று அமைச்சக இணையதளம் தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கரோனை தொற்று பாதிப்புக்கு 72,053 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 3 பேர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 72,056 ஆக உயர்ந்துள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 224 -ஆக உள்ளது. இதையடுத்து நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 68,37,203 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த செவ்வாய்க்கிழமை, கேரளத்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கரோனா தொற்றால் மக்கள் கவலையடையத் தேவையில்லை . தொற்று பாதிப்பை கையாள மாநில சுகாதாரத்துறை தயாராக இருப்பதாகவும், புதிய வகை கரோனா பரவல் குறித்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் என அந்த மாநில சுகாதாரத துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் தெரிவித்திருந்தாா்.

கரோனா நோயாளிகளுக்கு சிறப்பு வசதிகளை வழங்கவும், மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள், அறைகள், ஆக்ஸிஜன் படுக்கைகள், ஐசியு படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியிருந்தார்.

மேலும், மக்கள் தொடா்ந்து கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வேறு வகை இணைநோய்கள் இருப்பவா்கள் உடல்நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று  வீணா ஜாா்ஜ் தெரிவித்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com