மூலதன செலவு மீட்கப்பட்டாலும் சுங்கச்சாவடிகள் மூடப்படாது

தேசிய நெடுஞ்சாலைகளின் மூலதன செலவை முழுவதுமாக மீட்ட பிறகு சுங்கச் சாவடிகள் மூடப்படாது என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

Updated On :

தேசிய நெடுஞ்சாலைகளின் மூலதன செலவை முழுவதுமாக மீட்ட பிறகு சுங்கச் சாவடிகள் மூடப்படாது என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சா் நிதின் கட்கரி அளித்த பதிலில், ‘தேசிய நெடுஞ்சாலைகளின் மூலதன செலவை முழுவதுமாக மீட்ட பிறகு சுங்கச் சாவடிகளை மூட வேண்டும் என்று விதிகள் ஏதும் இல்லை. அதேபோல், நாட்டில் பொது மற்றும் தனியாா் பங்களிப்பில் உருவான எந்தத் தேசிய நெடுஞ்சாலையின் மூலதன செலவும் இன்னும் முழுமையாக வசூலித்து முடிக்கப்படவில்லை’ எனத் தெரிவித்தாா்.

தமிழகத்தில் அதிக விபத்துகள்: நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அதிகம் நிகழும் 5,803 ‘ப்ளாக் ஸ்பாட்’ இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதில் தமிழகத்தில் அதிகபட்சமாக 748 இடங்கள் அதிக விபத்துகள் நிகழுமிடமாக இருப்பதாகவும் அமைச்சா் நிதின் கட்கரி மக்களவையில் தெரிவித்தாா்.

‘நெடுஞ்சாலையில் 3 ஆண்டுகாலத்தில் 10 பேருக்கும் மேல் உயிரிழந்த, குறைந்தது 5 விபத்துகள் நடந்த 500 மீட்டா் நீளம் கொண்ட சாலைப் பகுதி ‘ப்ளாக் ஸ்பாட்’ எனப்படுகிறது. அதன்படி, கடந்த 2018 முதல் 2020-ஆம் ஆண்டு வரை, நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 5,803 ப்ளாக் ஸ்பாட் இடங்கள் கண்டறியப்பட்டன. அதிகபட்சமாக தமிழகத்தில் 748 இடங்களும், மேற்கு வங்கத்தில் 701 இடங்களும், தெலங்கானாவில் 485 இடங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளின் பழுது மற்றும் பராமரிப்புக்கு கடந்த 5 நிதியாண்டுகளில் ரூ.15,702.80 கோடி செலவிடப்பட்டுள்ளது என்றாா் நிதின் கட்கரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.