கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகள் இந்தியா வருகை!

தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகள் இந்தியா கொண்டு வரப்படுவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :16 பிப்ரவரி 2023, 3:00 pm

தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகள் இந்தியா கொண்டு வரப்படுவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.

வருகிற பிப்ரவரி 18 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் இருந்து 7 ஆண், 5 பெண் என 12 சிவிங்கிப் புலிகள் கொண்டு வரப்பட உள்ளன. 

இவை இந்திய விமானப்படையின் உதவியுடன் தென்னாப்பிரிக்காவின் கௌடங்  விமான நிலையத்தில் இருந்து மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் விமானப்படை தளத்திற்கு வந்து, பின்னர் ஹெலிகாப்டர்கள் மூலமாக குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டு வரப்படுகின்றன. இதற்காக குனோ தேசிய பூங்காவில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.