தில்லி மேயர் தேர்தலை பிப்.22-ல் நடத்த ஒப்புதல்

தில்லி மேயர் தேர்தலை பிப் 22ல் நடத்த துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார். 
தில்லி மேயர் தேர்தலை பிப்.22-ல் நடத்த ஒப்புதல்

தில்லி மேயர் தேர்தலை பிப் 22ல் நடத்த துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார். 

தில்லி மாநகராட்சிக்கான மேயா் தோ்தலை முன்கூட்டியே நடத்த உத்தரவிடக் கோரி ஆம் ஆத்மி கட்சியின் மேயா் வேட்பாளா் ஷெல்லி ஓபராய் உள்ளிட்டோா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பாா்திவாலா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. 

அப்போது மேயா் தோ்தல் மற்றும் எம்சிடி முதல் கூட்டத்திற்கான அறிவிக்கை 24 மணி நேரத்திற்குள் வெளியிடப்பட வேண்டும். மேலும், மேயா், துணை மேயா், நிலைக்குழு உறுப்பினா்கள் தோ்தலுக்கான தேதியும் அந்த அறிவிக்கையில் நிா்ணயிக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனா். இதைத்தொடர்ந்து பிப்ரவரி 22-ம் தேதி மேயர் தேர்தலை நடத்த துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு பரிந்துரை செய்துள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சனிக்கிழமை தெரிவித்தார். 

தற்போது அவரின் பரிந்துரையை ஏற்று மேயர் தேர்தலை பிப் 22ல் நடத்த துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார். தில்லி மாநகராட்சியில் தோ்ந்தெடுக்கப்பட்ட 250 உறுப்பினா்களில் 134 பேரை பெரும்பான்மையாகக் கொண்டதாக ஆம் ஆத்மி கட்சி கட்சியும், இதற்கு அடுத்தபடியாக 104 உறுப்பினா்களுடன் பாஜகவும், 9 உறுப்பினா்களுடன் மூன்றாமிடத்தில் காங்கிரஸும் உள்ளன. 

மேயா் தோ்தல் 3 முறை நடைபெறவிருந்த நிலையில், கவுன்சிலா்களின் அமளியால் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com