
மதுரையில் இருந்து தனி விமானத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கோவை வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் காவல்துறை இயக்குநர், கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் குடியரசுத் தலைவரை வரவேற்றனர். மேலும் குடியரசுத் தலைவருடன் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி வந்திருந்தார். குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக இன்று தமிழகம் வந்துள்ள திரெளபதி முர்மு, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
இதையும் படிக்க- காங்கிரஸுக்கு ஆதரவாக ஈரோட்டில் நாளை கமல் பிரசாரம்!
அவருக்கு கோயிலில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. திரெளபதி முர்மு வருகையையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முழுக்க காவல் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
காவல் துறையின் பாதுகாப்புக்கு மத்தியில் திரெளபதி முர்மு கோயிலில் சென்று சாமி தரிசனம் செய்து, கோயில் வளாகத்தை சுற்றிப் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து மதிய உணவு எடுத்துக்கொண்ட பிறகு மதுரையிலிருந்து புறப்பட்டார். சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் கோவைக்கு சென்றடைந்தார். அங்கு இன்று மாலை நடைபெறும் சிவராத்திரி விழாவில் அவங் பங்கேற்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.