
லக்னௌ: உத்தரப்பிரதேச மாநிலம் மஹராஜ்கஞ்சில் புதிதாக திருமணமான காவலரின் விடுப்பு விண்ணப்பம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் மௌ மாவட்டத்தில் வசித்து வரும் காவலர், மஹராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நௌதன்வா காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு கடந்த மாதம் திருமணம் நடந்தது.
இந்நிலையில், அவர் எழுதிய விடுப்பு விண்ணப்பத்தில் தனக்கு விடுமுறை கிடைக்காததால் ‘மனைவி கோபமாக இருக்கிறாள்’. போன் செய்யும் போது தன்னுடன் பேசுவதில்லை என்றும், பலமுறை அவருக்கு போன் செய்ததாகவும், ஆனால், அவர் தனது தாயிடம் போனை கொடுத்து விடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | அலட்சியத்தின் உச்சம்: பெங்களூருவில் 54 பயணிகளை ஏற்றிச் செல்லாமல் பறந்த விமானம்!
தனது மருமகனின் பிறந்தநாளுக்கு வீட்டிற்கு வருவேன் என்று தனது மனைவிக்கு உறுதியளித்ததாக குறிப்பிட்டுள்ள காவலர், விடுமுறை கிடைக்கவில்லையென்றால் வீட்டிற்கு செல்ல முடியாது என்று குறிப்பிட்டு விடுப்பு கேட்டுள்ளார்.
இந்த விண்ணப்பத்தைப் படித்த உதவி கண்காணிப்பாளர்(ஏஎஸ்பி), ஜனவரி 10 முதல் 5 நாள்களுக்கு அவருக்கு சாதாரண விடுப்பு வழங்கி உள்ளார்.
கடமையில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு அவர்களின் தேவைக்கேற்ப விடுப்பு எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், விடுப்பு காரணமாக எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது என்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது என அவர் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசம் மாநில காவலர் எழுதிய விடுப்பு விண்ணப்பம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.