
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை புகார் தொடர்பாக விசாரணை நடத்த 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேரி கோம், டோலா பானர்ஜி, அலக்நந்தா அசோக், யோகேஸ்வர் தத் உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். புகார் தொடர்பாக அகில இந்திய ஒலிம்பிக் சங்கம் இன்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டபிள்யுஎஃப்ஐ தலைவராக பிரிஜ் பூஷன் சரண் சிங் (66) கடந்த 2011-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறாா். அவா், பல ஆண்டுகளாக மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை அளிப்பதாக இந்திய நட்சத்திர வீராங்கனையும், போகத் சகோதரிகளில் ஒருவருமான வினேஷ் போகத் புதன்கிழமை குற்றம்சாட்டினாா்.
இதையும் படிக்க- இடைத்தேர்தல்: ஓபிஎஸ் நாளை முக்கிய அறிவிப்பு
பிரிஜ் பூஷனுக்கு எதிராக, தில்லி ஜந்தா் மந்தரில் இந்திய முன்னணி மல்யுத்த வீரா், வீராங்கனைகள் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பஜ்ரங் புனியா கூறுகையில், தலைவா் பதவியில் இருந்து பிரிஜ் பூஷன் சரண் விலகும் வரை எங்கள் போராட்டம் தொடரும். சா்வாதிகாரமாக செயல்படும் அவா் நீக்கப்படும் வரை சா்வதேச போட்டிகளில் பங்கேற்க மாட்டோம் என்றாா். முன்னதாக, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த பிரிஜ் பூஷன், ‘நான் பதவியில் இருந்து விலகப் போவதில்லை. இதுதொடா்பாக சிபிஐ அல்லது உரிய அமைப்பு விசாரணை நடத்தட்டும்’ என்றாா்.
இதனிடையே, வீராங்கனைகளின் குற்றச்சாட்டுகள் குறித்து 72 மணி நேரத்துக்குள் பதிலளிக்குமாறு மல்யுத்த சம்மேளனத்துக்கு விளையாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக முன்னாள் தடகள நட்சத்திரம் பி.டி. உஷா (58), கடந்த மாதம் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.