புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பிரதமர் மோடி நாளை(ஜூலை 7) சத்தீஸ்கர் பயணம்!

பிரதமர் நரேந்திர மோடி சத்தீஸ்கரில் ரூ. 7,500 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடக்கிவைக்கிறார்.

News image

கோப்புப்படம்

Updated On :6 ஜூலை 2023, 9:38 am

DIN

பிரதமர் நரேந்திர மோடி சத்தீஸ்கரில் ரூ. 7,500 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடக்கிவைக்கிறார். 

பிரதமர் நரேந்திர மோடி வரும் 7, 8-ஆம் தேதிகளில் உத்தர பிரதேசம், சத்தீஸ்கா், தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

முதலாவதாக நாளை(வெள்ளிக்கிழமை) சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் செல்லும் பிரதமர் மோடி 6 வழிச்சாலை உள்ளிட்ட 5 தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ரூ. 7,500 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடக்கிவைக்கிறார். மேலும் சத்தீஸ்கரில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் ஒன்றிலும் உரையாற்றுகிறார். 

மொத்தமாக 4 மாநிலங்களிலும் சேர்த்து ரூ.50,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதில் உத்தர பிரதேசம் தவிர்த்து இதர மாநிலங்களுக்கு நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.