தில்லி: தில்லியில் மழையால் பாதிக்கப்பட்டு வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவை காவல்துறை பிறப்பித்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் வடமாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றது. ஹிமாசலப் பிரதேசம், தில்லி, உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், மீட்புப் பணிகளும், நிவாரணப் பணிகளும் மேற்கொள்வது சவாலாக அமைந்துள்ளது.
இந்நிலையில், மக்கள் வீட்டை விட்டு வெளியேறினால் உயிரிழப்புகள் ஏற்படும் என்பதால், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேவையின்றி மக்கள் வெளியேற வேண்டாம் என்று தில்லி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.