பழம்பெரும் மராத்தி நடிகர் ரவீந்திர மகாஜனி சடலமாக மீட்பு
புணே அருகே ஒரு பிளாட்டில் இருந்து மராத்தி நடிகர் ரவீந்திர மகாஜனி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.


புணே அருகே ஒரு பிளாட்டில் இருந்து மராத்தி நடிகர் ரவீந்திர மகாஜனி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
ஜூஞ் உள்ளிட்ட பல்வேறு மராத்தி படங்களில் நடித்திருப்பவர் ரவீந்திர மகாஜனி(77). இவர் புணே அருகே தலேகான் பகுதியில் உள்ள பிளாட்டில் இருந்து இறந்த நிலையில் நேற்று கண்டெடுக்கப்பட்டார். வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் பிளாட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு பழம்பெரும் நடிகர் ரவீந்திர மகாஜனி இறந்த நிலையில் கிடந்தார். மூன்று நாட்களுக்கு முன்பு அவர் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது என்று காவல் அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.
ரவீந்திர மகாஜனி உடல் உடற்கூராய்வுக்குப் பிறகு இறுதிச் சடங்குகளுக்காக அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் மும்பையில் உள்ள அவரது மகனைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளோம் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...