பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'இந்தியா' என பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பொருட்டு, பிகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் நேற்றும் இன்றும் (ஜூலை 17, 18) நடைபெறுகிறது. இதில் 26 கட்சிகள் பங்கேற்றுள்ளன.
இந்நிலையில் பெங்களூரு கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டணிக்கு இந்தியா(INDIA) என பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய தேசிய வளர்ச்சிக் கூட்டணி(Indian National Developmental Inclusive Alliance) என்பது இதன் விரிவாக்கம் ஆகும்.
இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பெயர்களை பரிந்துரைத்த நிலையில் ராகுல் காந்தி இந்த பெயரை பரிந்துரை செய்ததாகத் தெரிகிறது.
இதையும் படிக்க | பிரதமர் பதவியையோ, அதிகாரத்தையோ காங்கிரஸ் விரும்பவில்லை: கார்கே
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.