மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட இருவரின் வீட்டிற்கு பெண்கள் தீ வைத்தனர்.
மணிப்பூரில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக கொண்டு சென்ற விடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் சம்மந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளி ஹுய்ரேம் ஹிரோதாஸ் சிங் (32) உள்பட இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | மணிப்பூர்: அந்த அக்கிரம நாளில் நடந்தது என்ன? நேரடி சாட்சியம்!
இந்நிலையில் மைதேயி சமூகத்தைச் சேர்ந்த சில பெண்களே குற்றவாளியான அதே சமூகத்தைச் சேர்ந்த ஹுய்ரேம் ஹிரோதாஸ் சிங் வீட்டிற்கு நேற்று தீ வைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக மற்றொரு குற்றவாளியின் வீடும் தீ வைத்து அழிக்கப்பட்டது.
தௌபல் மாவட்டத்தில் உள்ள பேச்சி அவாங் லைக்காய் என்ற இடத்தில் உள்ள 32 வயது இளைஞரின் வீட்டை பெண்கள் முகத்தை மூடிக்கொண்டு வீட்டை இடித்து சேதப்படுத்தி பின்னர் எரித்தனர்.
மேலும் ஒரு சில பகுதிகளில் பெண்கள் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்!

கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி

உயர் பதவி காத்திருக்கு மகர ராசிக்கு: தினப்பலன்கள்!

அவதார், ஒன் பேட்டில் ஆப்டர் அனதர், சின்னர்ஸ் படங்களுக்கு ஆஸ்கர் விருது!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

