மணிப்பூர் ஆளுநருடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சந்திப்பு

மணிப்பூர் சென்றுள்ள இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் அம்மாநில ஆளுநர் அனுசுயா உய்கேவை இன்று சந்தித்தனர். 
மணிப்பூர் ஆளுநருடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சந்திப்பு

மணிப்பூர் சென்றுள்ள இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் அம்மாநில ஆளுநர் அனுசுயா உய்கேவை இன்று சந்தித்தனர். 

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி, சிறுபான்மையாக உள்ள குகி பழங்குடி சமூகத்தினா் இடையே நிலவும் மோதலால், அந்த மாநிலத்தில் இரண்டு மாதங்களுக்கு மேலாக பதற்றமான சூழ்நிலை நீடிக்கிறது. இதன் காரணமாக பலா் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில் மணிப்பூர் சென்றுள்ள இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் அம்மாநில ஆளுநர் அனுசுயா உய்கேவை இன்று சந்தித்தனர். முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை எம்.பி.க்கள் நேற்று சந்தித்த நிலையில் இன்று ஆளுநரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். 

அப்போது மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர். 

இதற்கிடையே மணிப்பூரில் மே 4ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தாயாரையும் எம்.பிக்கள் குழு சந்தித்தனர். வன்முறையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய எதிர்க்கட்சிகள் குழு 2 நாள் பயணமாக மணிப்பூர் சென்றுள்ளது. 

இந்த குழுவில் காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 20 கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com