6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மணிப்பூர் கொடூரத்துக்கு காவல்துறையே காரணம்: பாதிக்கப்பட்ட பெண்கள்

பாதிக்கப்பட்ட குக்கி இனப் பெண்கள், வன்முறை கும்பலிடம் எங்களை விட்டுவிட்டுச் சென்றதே மணிப்பூர் காவல்துறைதான் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :31 ஜூலை 2023, 10:28 am

DIN

புது தில்லி: மணிப்பூர் கொடூரத்துக்கு காவல்துறையே காரணம் என்று கூறும் பாதிக்கப்பட்ட குக்கி இனப் பெண்கள், வன்முறை கும்பலிடம் எங்களை விட்டுவிட்டுச் சென்றதே மணிப்பூர் காவல்துறைதான் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

மணிப்பூரில் ஆடைகளின்றி இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இரண்டு பெண்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை அமர்வு விசாரித்து வருகிறது.

பாதிக்கப்பட்ட மணிப்பூர் பெண்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை அமர்வு, இத்தகைய கொடுமைகளுக்கு ஆளான பல பெண்கள் இன்னமும் புகார் கொடுக்காமல் இருக்கின்றனர். மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த கொடூரத்தை பரந்த கண்ணோட்டத்துடன் விசாரிக்க வேண்டும் என்றது. மேலும்,  மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமைகள் குறித்து இதுவரை எத்தனை முதல் தகவல்அறிக்கைளை பதிவு செய்துள்ளீர்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஆடைகள் இன்றி இழுத்துவரப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இரண்டு பெண்கள் தொடர்ந்த வழக்கில்,  உச்ச நீதிமன்றம் இந்தக் கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறது.

மணிப்பூர் கொடூர சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் தங்களது அடையாளங்களை வெளியிடாமல் பாதுகாக்கவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணையை, உச்ச நீதிமன்றம் நேரடியாக கண்காணித்தால், அதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானார். 

முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பாக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையிலும், பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதும், இந்த சம்பவங்கள் அனைத்தும் நடந்த போது அங்கே காவல்துறையினர் இருந்ததாகவும், ஆனால் அவர்கள் தங்களை மீட்க எந்த உதவியும் முயற்சியும் செய்யவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.