எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்!

பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
ஜெய்ராம் ரமேஷ் (கோப்புப் படம்)
ஜெய்ராம் ரமேஷ் (கோப்புப் படம்)

பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமார் ஈடுபட்டு வருகிறார்.

முன்னதாக, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்து சில நாள்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து, அனைத்து எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் மாபெரும் கூட்டம் பாட்னாவில் ஜூன் 12-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்றும், கட்சி சார்பில் யார் பங்கேற்பார் என்று விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், திரிணமூல், திமுக, ஆம் ஆத்மி, ஆர்ஜேடி, சிவசேனை(உத்தவ் தாக்கரே அணி), இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com