சிவசேனை மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ரௌத் மற்றும் அவரது சகோதரருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டலில் இரண்டு பேரை மகாராஷ்டிர காவல் துறை தடுப்புக் காவலில் வைத்துள்ளது.
சிவசேனை மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ரௌத் மற்றும் அவரது சகோதரரும் சட்டமன்ற உறுப்பினருமான சுனில் ரௌத் இருவருக்கும் மர்ம நபர்களால் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக சுனில் ரௌத் தெரிவித்தார். கொலை மிரட்டல் விடுத்த நபர் அவரையும், அவரது சகோதரரான சஞ்சய் ரௌத்தையும் சுட்டுக் கொன்றுவிடுவேன் என மிரட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: மணிப்பூர் கலவரம்: சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது சிபிஐ
இது குறித்து சஞ்சய் ரௌத் கூறியதாவது: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு சமூக ஊடகம் வாயிலாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது மிகவும் கவனம் கொடுக்கப்பட வேண்டிய விஷயம். இதுபோன்ற மிரட்டல்கள் எதிர்க்கட்சியினை அச்சுறுத்துவதற்காக விடுக்கப்படுகிறது. இந்த மிரட்டல்களுக்கு அரசு அதிக கவனம் கொடுக்க வேண்டும். நான் அல்ல. அரசுக்கு இதுபோன்ற அச்சுறுத்தல்கள் தேவைப்படுகின்றன. இந்த விஷயம் தற்போது காவல் துறை வசம் உள்ளது. அவர்கள் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். எனது சகோதரர் சுனில் ரௌத்துக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. நான் எந்த ஒரு புகாரும் அளிக்கவில்லை. நாங்கள் இந்த மிரட்டல் குறித்து கவலைப்படவில்லை. இதுபோன்ற மிரட்டல் கடந்த காலங்களிலும் வந்திருக்கிறது என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை தரப்பில் கூறியதாவது: சந்தேகத்தின் இரண்டு பேரை தடுப்புக் காவலில் வைத்துள்ளோம். இந்த மிரட்டல் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளிப்பதற்காக காத்திருக்கிறோம். புகார் அளித்தவுடன் அவர்கள் இருவரையும் கைது செய்வோம் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 31) - எதிர்ப்புகள் விலகும் மேஷ ராசிக்கு!

இன்றைய ராசி பலன்கள் (31.7.2026) 12 ராசிகளுக்கும்! மிதுன ராசியா நீங்க?

காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க நாளை அனைத்துக் கட்சி கூட்டம்: புதிய தமிழகம் கட்சித் தலைவா் கே.கிருஷ்ணசாமி அறிவிப்பு

ஆடி வெள்ளி, வார விடுமுறை: கோவையில் இருந்து 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



