பஞ்சாபில் ஆட்சிக்கு வந்து ஓராண்டை நிறைவு செய்த ஆம் ஆத்மி!

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து அம்மாநில முதல்வர் பகவந்த் மான் இந்த ஓராண்டில் பஞ்சாபில் ஆம் ஆத்மியின் சாதனைகளைப் பட்டியலிட்டுள்ளார். 
பஞ்சாபில் ஆட்சிக்கு வந்து ஓராண்டை நிறைவு செய்த ஆம் ஆத்மி!

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து அம்மாநில முதல்வர் பகவந்த் மான் இந்த ஓராண்டில் பஞ்சாபில் ஆம் ஆத்மியின் சாதனைகளைப் பட்டியலிட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தை அனைத்துத் துறைகளிலும் சிறந்த மாநிலமாக மாற்ற உழைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் பேசியதாவது: அரசு தற்போது முன்னேற்றத்தின் இரண்டாவது கட்டத்தில் உள்ளது. ஏழை மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆத் ஆத்மி தலைமையிலான அரசு மாணவர்களுக்காக ஸ்கூல் ஆஃப் எமினன்ஸைத் தொடங்க உள்ளது. எங்களது ஆட்சியின் முதல் ஆண்டில் நாங்கள் நிறைய உழைத்துள்ளோம். நாங்கள் மாநில முன்னேற்றத்தில் இரண்டாவது படிநிலையில் உள்ளோம். பெரிய தொழிலதிபர்கள் பஞ்சாபில் முதலீடு செய்வதில் ஆர்வமாக உள்ளனர். அவர்கள் இங்கு தொழில் தொடங்க ஆர்வம் காட்டுவதால் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். எங்களது நோக்கம் அடுத்து ஆட்சியமைப்பது கிடையாது. பொதுவாக கட்சிகள் அடுத்து ஆட்சி அமைப்பது குறித்து சிந்திப்பார்கள். ஆனால், மக்கள் தான் அரசினை உருவாக்கியுள்ளார்கள்.

எங்களது நோக்கம் அடுத்த தலைமுறையை முன்னோக்கி கொண்டு செல்வது. ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது. ஓராண்டுக்கு முன்பு பஞ்சாப் மக்களிடம் முன் ஆம் ஆத்மியின் அரசு மாநிலத்தில் ஆட்சியமைத்தது. தற்போது ஆம் ஆத்மி மக்களின் நம்பிக்கையாக மாறியுள்ளது. இந்த ஓராண்டில் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாங்கள் இந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் என்றார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி 92 தொகுதிகளில் வெற்றி பெற்று பஞ்சாபில் ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com