தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சன்ரைசர்ஸ் அணியின் புதிய சீருடை அறிமுகம்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய சீருடை இன்று அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 மார்ச் 2023, 11:35 am

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய சீருடை இன்று அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

மார்ச் 31 அன்று தொடங்கும் ஐபிஎல் 2023 போட்டி மே 28 அன்று நிறைவுபெறுகிறது. ஆமதாபாத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இறுதி ஆட்டமும் ஆமதாபாத்தில் நடைபெறவுள்ளது.

சென்னை, ஆமதாபாத், மொஹலி, லக்னெள, ஹைதராபாத், பெங்களூரு, தில்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, குவாஹாட்டி, தரம்சாலா ஆகிய நகரங்களில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

குரூப் ஏ பிரிவில் மும்பை, கேகேஆர், ராஜஸ்தான், தில்லி, லக்னெள ஆகிய அணிகளும் குரூப் பி பிரிவில் சென்னை, சன்ரைசர்ஸ், பஞ்சாப், ஆர்சிபி, குஜராத் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன

இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினர் புதிய சீருடையுடன் இந்த வருடம் விளையாடவுள்ளார்கள். புதிய சீருடையை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கடந்த இரு வருடங்களாக சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் போட்டியில் மிக மோசமாக விளையாடியது. 2021-ல் 3 வெற்றிகள் மட்டுமே பெற்ற சன்ரைசர்ஸ் அணி, 2022-ல் 6 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்தையே பிடித்தது. கடந்த இரு வருடங்களில் 28 ஆட்டங்களில் 9 வெற்றிகள், 18 தோல்விகள், ஒரு டை என ஐபிஎல் போட்டியின் பலவீனமான அணியாகவே சன்ரைசர்ஸ் இருந்தது. இதையடுத்து சன்ரைசர்ஸ் - பயிற்சியாளர் டாம் மூடி என இரு தரப்பும் பிரிந்து செல்ல முடிவெடுத்தன. பிறகு, பிரபல முன்னாள் வீரர் பிரையன் லாரா, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். கடந்த வருடம் சன்ரைசர்ஸ் கேப்டனாக இருந்த கேன் வில்லியம்சன் இந்த வருடம் குஜராத் அணியில் விளையாடவுள்ளார்.

ஐபிஎல் 2023 போட்டிக்கான சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக தென்னாப்பிரிக்க பேட்டர் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். 28 வயது மார்க்ரம், தென்னாப்பிரிக்க அணிக்காக 33 டெஸ்ட், 47 ஒருநாள், 31 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சமீபத்தில் எஸ்ஏ 20 போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்குத் தலைமை தாங்கி, சாம்பியன் பட்டம் வென்றார். இதன் காரணமாக ஐபிஎல் போட்டியிலும் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.