
சர்ச்சையை கிளம்பியுள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடக தேர்தலையொட்டி பெல்லாரியில் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, '‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தீவிரவாத சதியை அடிப்படையாகக் கொண்டது. தீவிரவாதம் எப்படி ஊடுருவியிருக்கிறது என்பதை இந்த படம் பேசுகிறது.இது பயங்கரவாதத்தின் கேவலமான உண்மையைக் காட்டுகிறது. பயங்கவாதிகளின் நடவடிக்கையை அம்பலப்படுத்துகிறது.
இதையும் படிக்க | லவ் ஜிகாத்.. ஐஎஸ்ஐஎஸ்.. தி கேரளா ஸ்டோரியின் அரசியல்!
தீவிரவாதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து தீவிரவாதத்தை ஆதரிக்கிறது. வாக்கு வங்கிக்காக காங்கிரஸ் இந்த தீவிரவாதத்தை ஆதரிக்கிறது. அப்படிப்பட்ட கட்சியால் கர்நாடகத்தை எப்படி காப்பாற்ற முடியும்? பயங்கரவாத சூழல் இருந்தால் தொழில், ஐடி, விவசாயம் மற்றும் புகழ்பெற்ற கலாசாரம் என அனைத்தும் அழிந்துவிடும்' என்று பேசியுள்ளார்.
இதையும் படிக்க | தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G