இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு

'தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க கேரள உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 12:55 pm

DIN

'தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. 

சுதிப்தோ சென் இயக்கத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் கேரள இந்து பெண்களை கட்டாயப்படுத்தி இஸ்லாமுக்கு மதமாற்றம் செய்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர வைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

இது வெறுப்புணர்வைத் தூண்டும் விதத்தில் இருப்பதால் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேரளத்தில் அனைத்துக் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் படத்திற்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், வழக்கை விசாரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் கேரள உயர்நீதிமன்றத்தை நாட மனுதாரருக்கு அறிவுறுத்தியது. 

அதன்படி கேரள உயர்நீதிமன்றம் இன்று இதுதொடர்பான வழக்கை விசாரித்த நிலையில் படத்திற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

'மனுதாரர்கள் கூட இன்னும் படத்தை பார்க்கவில்லை எனும்போது எப்படி தடை செய்ய உத்தரவிட முடியும்? மேலும் தணிக்கை குழு, படத்தை பார்த்துவிட்டு சான்றிதழ் அளித்துள்ளது. 

இந்தப் படம் கற்பனையே தவிர வரலாறு அல்ல என்றும், கேரளத்தைப் போன்ற மதச்சார்பற்ற சமூகம் இந்த படத்தை ஏற்றுக் கொள்ளும். 

படத்தை திரையிடுவதால் கேரளத்தில் நிலவும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முடியாது

மேலும் இதில் இஸ்லாமுக்கு எதிராக எதுவும் இல்லை, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு எதிராகத்தான் இருக்கிறது' என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். 

ட்ரைலரில் இடம்பெற்றுள்ள 'கேரளத்தில் உள்ள 32,000 பெண்கள் ஐ.எஸ். அமைப்பில் இணைந்துள்ளனர்' என்ற கருத்து நீக்கப்படும் என படத்தின் தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.