நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு: காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 கட்சிகள் புறக்கணிப்பு!

குடியரசுத் தலைவரை அழைக்காததால் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 கட்சிகள் அறிவித்துள்ளன. 
நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு: காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 கட்சிகள் புறக்கணிப்பு!

குடியரசுத் தலைவரை அழைக்காததால் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 கட்சிகள் அறிவித்துள்ளன. 

தில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றக் கட்டடத்தை வருகின்ற மே 28 ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். 

இந்நிலையில், குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்காதது, ஹிந்து தேசியவாதி வி.டி.சாவா்க்கரின் பிறந்த தினமான மே 28-ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்படுவது உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி எதிா்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமா்சித்தன.

இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக 19 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. 

காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, சிவசேனை(உத்தவ் தாக்கரே), சமாஜவாதி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், கேரள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ராஷ்ட்ரிய லோக் தளம், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிஸ் லீக், தேசிய மாநாட்டுக் கட்சி, மதிமுக, புரட்சிகர சோஷலிசக் கட்சி  என 19 கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. 

நாடாளுமன்றத்தின் அங்கமாக இருக்கக்கூடிய குடியரசுத் தலைவரை புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவுக்கு அழைக்காதது அவரை அவமதிப்பது மட்டுமின்றி ஜனநாயகத்திற்கு எதிரானது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஒரு நாட்டின் தலைவராக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மட்டுமே புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறக்க வேண்டும், திறப்பு விழாவிற்கு தலைமை தாங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com