இந்தியா முழுவதும் இன்று முதல் வெப்பநிலை குறையத் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான், பஞ்சாப், தில்லி, உத்தரப் பிரதேசம், ஹரியானா, சத்தீஸ்கரில் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 6 மாநிலங்களில் மலைப் பகுதியை ஒட்டிய இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அடுத்த 2 நாள்களில் நாள்களில் தென்கிழக்கு வங்காள விரிகுடா, நிக்கோபார் தீவுகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான சூழல் சாதகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தமிழ்நாட்டில் 4 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
இன்று கேரளத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.