தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பயணித்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், மிஸோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு நவம்பர் மாதத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி தேசிய, மாநில கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதில், தெலங்கானா மாநிலத்துக்கு வருகிற நவம்பர் 30 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், மகபூப்நகர் மாவட்டம் தேவரகத்ரா பகுதியில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்வர் சந்திரசேகர் ராவ், ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.
அப்போது திடீரென ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக்கோளாறைக் கண்டறிந்து கூறியதால் முதல்வரின் பண்ணை வீட்டில் உடனடியாக தரையிறக்கப்பட்டது. இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


