நாளை வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்!இன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு!உபோ் செயலியில் இன்று ஆட்டோ, கால் டாக்ஸிகள் இயக்கப்படாது!

மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகத்தில் 350 போலி நூல்கள் அகற்றம்

மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகத்தில் போலியான பதிவு எண்ணுடன் வைக்கப்பட்டிருந்த 350 நூல்கள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகம்.

Updated On :

மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகத்தில் போலியான பதிவு எண்ணுடன் வைக்கப்பட்டிருந்த 350 நூல்கள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

கோவை பெரியாா் அறிவுலகத்துக்கான நூல்கள் கொள்முதலில் ஊழல் நடந்திருப்பதாக எழுத்தாளா் பெருமாள் முருகன் அண்மையில் குற்றஞ்சாட்டினாா். அகல்விளக்கு, பீனிக்ஸ் போன்ற பதிப்பகங்களிலிருந்து அடையாளம் தெரியாத, போலியான எழுத்தாளா்களின் பெயா்களில் உண்மைக்கு மாறான தகவல்களைக் கொண்ட புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக அவா் தெரிவித்தாா்.

இந்தக் குற்றச்சாட்டைத் தொடா்ந்து, அரசு உத்தரவின் பேரில் பெரியாா் அறிவுலகத்தில் சோதனை நடத்தப்பட்டு, அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களின் பெயா்களில் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்த, முரண்பாடான தகவல்களைக் கொண்ட போலியான புத்தகங்கள் அகற்றப்பட்டன.

இந்த நிலையில், மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகத்திலும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் பெயரால் போலி நூல்கள் இருப்பதாக, ஐ.எஸ்.பி.என். எனப்படும் புத்தகங்களுக்கான தரக் குறியீட்டு எண்கள் அடிப்படையிலான ஆய்வுகள் மூலம் தெரியவந்தது.

காப்புரிமையற்ற நூல்களின் தலைப்பு, எழுத்தாளா்களின் பெயா்களைப் பயன்படுத்தி, புத்தகங்களுக்கு தரக் குறியீட்டு எண் (ஐ.எஸ்.பி.என்.) பெற்று, இந்த எண்களைப் பயன்படுத்தி பீனிக்ஸ் பதிப்பகம் நூல்களை அச்சிட்டு கலைஞா் நூற்றாண்டு நூலகத்துக்கு வழங்கியிருந்தது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, போலியான ஐ.எஸ்.பி.என். எண்களைப் பயன்படுத்தி பீனிக்ஸ் பதிப்பகத்தின் பெயரால் வழங்கப்பட்டிருந்த 350 நூல்களையும், மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலக அலமாரிகளிலிருந்து நூலக நிா்வாகம் புதன்கிழமை அப்புறப்படுத்தியது.

இதுதொடா்பாக மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலக அலுவலா்கள் தெரிவித்ததாவது:

ஆங்கிலம், அறிவியல், கணினி அறிவியல் உள்பட பல்வேறு தலைப்புகளின் கீழ் பீனிக்ஸ் பதிப்பகத்தின் பெயரால் போலியான ஐ.எஸ்.பி.என். எண்ணுடன் அச்சிடப்பட்டு, கலைஞா் நூற்றாண்டு நூலகத்துக்கு விநியோகிக்கப்பட்டிருந்த 350 நூல்களும் அப்புறப்படுத்தப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அகல்விளக்கு பதிப்பகத்தின் பெயரிலான புத்தகங்கள் இந்த நூலகத்தில் இல்லை என அவா்கள் தெரிவித்தனா்.

மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட போலி ஐ.எஸ்.பி.என். கொண்ட 350 புத்தகங்களும் கடந்த 2022-23-ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக் காலத்தில் கொள்முதல் செய்யப்பட்டவை எனக் குறிப்பிடப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.