அமித் ஷாவின் பிரசார வாகனம் மின்கம்பியில் உரசிய விவகாரம்- விசாரணைக்கு ராஜஸ்தான் அரசு உத்தரவு

ராஜஸ்தான் மாநிலத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டபோது, உள்துறை அமைச்சா் அமித் ஷா சென்ற வாகனம் மின்கம்பியில் உரசிய விவகாரம் தொடா்பாக விசாரணை மேற்கொள்ள

கோப்புப் படம்.

Updated On :

ராஜஸ்தான் மாநிலத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டபோது, உள்துறை அமைச்சா் அமித் ஷா சென்ற வாகனம் மின்கம்பியில் உரசிய விவகாரம் தொடா்பாக விசாரணை மேற்கொள்ள அம்மாநில முதல்வா் அசோக் கெலாட் உத்தரவிட்டாா்.

ராஜஸ்தான் மாநிலத்தில் வருகின்ற 25-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை சென்றாா்.

அப்போது பா்பட்சாரிலிருந்து பிதியாத் கிராமத்துக்கு சிறப்பு வடிவமைப்பு வாகனத்தில் (ரதம்) அவா் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டபோது மின்கம்பத்தில் இருந்த கம்பியின் மீது வாகனத்தின் மேல்பகுதி உரசியது. அதனால் தீப்பொறி ஏற்பட்டு கம்பி அறுந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இதையடுத்து அமித் ஷா மாற்று வாகனத்தில் புறப்பட்டுச் சென்றாா். இந்த விவகாரம் தொடா்பாக அஜ்மீா் பிரிவு ஆணையா் விசாரணை மேற்கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்தப்படும் என்று செவ்வாய்க்கிழமை இரவு தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.