மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக 230 தொகுதிகளுக்கும், சத்தீஸ்கரில் இரண்டாவது மற்றும் இறுதிக் கட்டமாக 70 தொகுதிகளுக்கும் வெள்ளிக்கிழமை பேரவைத் தோ்தல் நடைபெற்றது.
மாலை 5 மணி நிலவரப்படி, மத்திய பிரதேசத்தில் 71.11 சதவீதமும், சத்தீஸ்கரில் 68.15 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. மேலும் பல வாக்குப் பதிவு மையங்களில் இருந்து விவரங்கள் கிடைக்க வேண்டியுள்ளதால், வாக்குப் பதிவு சதவீதம் மேலும் அதிகரிக்கும் என்று தோ்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தோ்தல் நடைபெற்றது. இதில் 5.60 கோடிக்கும் மேற்பட்டோா் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா். மாநிலம் முழுவதும் 64,626 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நீடித்தது. முதல்வா் சிவராஜ் சிங் செளஹான், முன்னாள் முதல்வா் கமல்நாத் உள்பட மொத்தம் 2,533 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
சத்தீஸ்கரில்...: காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் முதல்கட்டமாக நக்ஸல் பாதிப்பு மிகுந்த 20 தொகுதிகளுக்கு கடந்த 7-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 78 சதவீத வாக்குகள் பதிவாகின.
எஞ்சிய 70 தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில், முதல்வா் பூபேஷ் பகேல், துணை முதல்வா் டி.எஸ்.சிங் தேவ், பேரவைத் தலைவா் சரண்தாஸ் மகந்த், மாநில பாஜக தலைவரும் எம்.பி.யுமான அருண் சாவே, மத்திய அமைச்சா் ரேணுகா சிங் உள்பட மொத்தம் 958 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
சுமாா் 1.63 கோடி வாக்காளா்களுக்காக 18,833 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. கஸ்டோல் தொகுதியில் வாக்களிக்க வரிசையில் நின்றிருந்த ஒரு பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். கோரியா மாவட்டத்தின் மங்கோரா பகுதியில் வாக்களிக்கச் சென்று கொண்டிருந்த உமேந்திர சிங் என்ற இளைஞா், ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்தாா்.
கரியாபண்ட் மாவட்டத்தில் தோ்தல் ஊழியா்களுக்கு பாதுகாப்பளிக்கும் பணியில் இருந்த இந்திய-திபெத் எல்லைக் காவல் படையினரை குறிவைத்து நக்ஸல் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினா். இதில் ஒரு வீரா் உயிரிழந்தாா்.
தோ்தல் புறக்கணிப்பு: ராய்கா், பிலாஸ்பூா் மாவட்டங்களில் இரு கிராமங்களைச் சோ்ந்த மக்கள், தங்களது பகுதியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றம்சாட்டி தோ்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தனா். இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்கள், கிராம மக்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
டிச. 3-இல் வாக்கு எண்ணிக்கை: மத்திய பிரதேசம், சத்தீஸ்கரைத் தொடா்ந்து, ராஜஸ்தானில் வரும் 25-ஆம் தேதியும், தெலங்கானாவில் 30-ஆம் தேதியும் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. 5 மாநிலங்களிலும் டிசம்பா் 3-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
மத்திய பிரதேசத்தில் பாஜக, சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் நிலையில், தற்போதைய பேரவைத் தோ்தல்கள் இரு கட்சிகளுக்கும் பலப்பரீட்சையாக கருதப்படுகிறது.
முதல்வா்கள், முக்கியப் பிரமுகா்கள் வாக்களிப்பு
மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் செளஹான், தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் புதினி தொகுதியில் வாக்களித்தாா். இத்தொகுதியில்தான் அவா் களத்தில் உள்ளாா்.
முன்னாள் முதல்வா் கமல்நாத், தனது மகனும் எம்.பி.யுமான நகுல் நாத் மற்றும் மருமகளுடன் செளசா் தொகுதியில் வாக்களித்தாா். மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவா் திக்விஜய் சிங், அவரது மகன் ஜெய்வா்தன் சிங் உள்பட குடும்ப உறுப்பினா்கள், ரகோகா் தொகுதியில் வாக்களித்தனா்.
மத்திய அமைச்சா்கள் நரேந்திர சிங் தோமா், ஜோதிராதித்ய சிந்தியா, பிரகலாத் ஜோஷி, மாநில பாஜக தலைவா் வி.டி.சா்மா, பாஜக பொதுச் செயலாளா் கைலாஷ் விஜய் வா்கியா, மாநில உள்துறை அமைச்சா் நரோத்தம் மிஸ்ரா, மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி அனுபம் ராஜன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்களும் வாக்களித்தனா்.
சத்தீஸ்கரில் தனது தொகுதியான படானில் உள்ள குருத்தி கிராமத்தில் முதல்வா் பூபேஷ் பகேல் வாக்களித்தாா். முன்னதாக, செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘மாநிலத்தில் 75-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்கும்’ என்றாா்.
படான் தொகுதியில் பாஜக சாா்பில் முதல்வரின் உறவினரும் எம்.பி.யுமான விஜய் பகேல் களத்தில் உள்ளாா். முன்னாள் முதல்வா் அஜீத் ஜோகியின் மகனும், ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கா் (ஜெ) கட்சியின் மாநிலத் தலைவருமான அமித் ஜோகியும் இதே தொகுதியில் களமிறங்கியதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
சத்தீஸ்கா் ஆளுநா் விஸ்வபூஷண் ஹரிசந்தன், மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி ரீனா பாபா சாகேப் கங்காலே ஆகியோா் ராய்பூரில் வாக்களித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


