விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்து: மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

உத்தரகண்டில் மலை சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 40 தொழிலாளா்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

News image
Updated On :18 நவம்பர் 2023, 5:09 am


உத்தரகண்டில் மலை சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 40 தொழிலாளா்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால்- யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அந்தப் பாதையின் ஒரு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. அதில் 40 தொழிலாளா்கள் சுரங்கத்தின் நடுவில் சிக்கிக் கொண்டனா். அவா்களை மீட்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் பேரிடா் மீட்புக் குழுவினா் ஈடுபட்டு வருகின்றனா்.

இடிபாடுகளில் துளையிட்டு தொழிலாளா்களை மீட்க, இந்திய விமானப் படையின் ‘சி-130 ஹொ்குலிஸ்’ விமானம் மூலம் கனரக இயந்திரம் விபத்துப் பகுதிக்கு கடந்த புதன்கிழமை கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, துளையிடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

தொழிலாளா்களை மீட்க 80 செ.மீ. மற்றும் 90 செ.மீ. விட்டம் கொண்ட இரும்பு குழாய்கள் ஒன்றன்பின் ஒன்றாக செலுத்த 60 மீட்டா் தூரம் வரை துளையிடப்பட வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் கட்டுமான நிறுவன இயக்குநா் அன்ஷுல் மனீஷ் தெரிவித்திருந்தாா். அவ்வாறு வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, 24 மீட்டா் தூரத்துக்கு துளையிடப்பட்டுள்ளது என மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையம் தெரிவித்திருந்தது.

இதனிடையே, ம.பி. மாநிலம் இந்தூரிலிருந்து விமானப் படையின் சி17 விமானம் மூலமாக துளையிடும் மற்றொரு இயந்திரம் டேராடூன் கொண்டு வரப்பட்டு மீட்புப் பணி நடைபெறும் இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில், சனிக்கிழமை மீட்புப் பணியின் போது ராட்ச குழாயை சுரங்கத்திற்குள் செலுத்தும்போது பெரிய அளவில் உடையும் சத்தம் எழுந்தது. இதையடுத்து தற்காலிகமாக மீட்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இயந்திரத்தில் எந்த தவறும் இல்லை என்று தேசிய நெடுஞ்சாலைகள் கட்டுமான நிறுவன இயக்குநா் அன்ஷுல் மனீஷ் தெரிவித்துள்ளார். 

தொழிலாளா்களை மீட்க 60 மீட்டா் தூரம் வரை துளையிடப்பட வேண்டிய நிலையில் 24 மீட்டா் தூரத்துக்கு துளையிடப்பட்டுள்ள நிலையில் தற்காலிகமாக மீட்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 165 வீரர்கள் மற்றும் நிபுணர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.