உலகக் கோப்பை இறுதிப் போட்டி நாளை (நவம்.19) நடைபெறுவதை முன்னிட்டு, இந்திய ரயில்வே இன்று சிறப்பு ரயில்களை இயக்குகின்றது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான இறுதிப்போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது.
இதனைக் காண்பதற்காக கிரிக்கெட் ரசிகர்கள் ரூ.20,000 முதல் ரூ.40,000 வரை செலவளித்து விமானத்தில் வருவதை தவிர்ப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை தில்லியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் நாளை காலை அகமதாபாத் வந்து சேரும். இறுதிப்போட்டி முடிந்தபின்பு திங்கள்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு அகமதாபாத்தில் இருந்து புறப்பட்டு, தில்லிக்கு திரும்பிச் செல்லும்.
இதையும் படிக்க: ஷமியால் ஆனது: இறுதிப் போட்டியில் என்ன செய்யப் போகிறார்?
இதைப் போலவே மும்பையில் இருந்து அகமதாபாத்துக்கு மேலும் மூன்று சிறப்பு ரயில்கள் இன்று இயக்கப்படுகின்றன.
இதில் ரூ.620 முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.1665 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா பங்கேற்ற எந்த ஆட்டத்திலும் தோல்வியடையாமல் தொடர்ந்து வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. மறுபுறம் 8-வது முறையாக உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பங்கேற்கிறது ஆஸ்திரேலிய அணி.
1983 மற்றும் 2011 ஆகிய இருமுறை கோப்பை வென்ற இந்திய அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. அதேபோல ஆறாவது முறையாக கோப்பை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலியா இருக்கிறது.
இந்த இரு அணிகளுக்கும் இடையில் மிகக் கடுமையான போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 - இன்றைய நேரலை! (ஆக. 12)

தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)

என்னால் மறக்க முடியாத இசையமைப்பாளர் இவர்தான்! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 8

தொகுதி மறுவரையறை: பேரவையில் தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!



