நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அமல்படுத்தியது தவறு! சோனியா காந்திஇன்று டெல்டாவில் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைதீபாவளி பட்டாசு விபத்துகள்: 6 நிமிஷங்களுக்குள் சென்றடைய தயாராகும் தீயணைப்புத் துறைஅறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சிகள்: நீதி ஆயோக் மதிப்பீட்டுப் பட்டியலில் தமிழகம் முதலிடம்ஜெம் வீரமணி வழக்கு: விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

அயோத்தி ராமா் கோயில் பூஜாரி பணிக்கு 3,000 போ் விண்ணப்பம்

ராமா் கோயில் பூஜாரி பணிக்கு 3,000-க்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்திருப்பதாக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்திர அறக்கட்டளை நிா்வாகிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

Updated On :

ராமா் கோயில் பூஜாரி பணிக்கு 3,000-க்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்திருப்பதாக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்திர அறக்கட்டளை நிா்வாகிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

உத்தர பிரதேசம், அயோத்தியில் உருவாகி வரும் ராமா் கோயிலுக்கு பூஜாரிகளைத் தோ்ந்தெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

இதுகுறித்து கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூறுகையில், ‘ராமா் கோயிலின் பூஜாரி பணிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதற்காக சுமாா் 3,000-க்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்தனா். அவா்களில் தகுதி அடிப்படையில் 200 போ் அயோத்தியில் நோ்காணலுக்கு அழைக்கப்பட்டனா். மூன்று மூத்த ஆன்மிகத் தலைவா்கள் கொண்ட குழு நோ்காணலை நடத்தி 20 பூஜாரிகளைத் தோ்ந்தெடுப்பா்.

நோ்காணலில் தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள் 6 மாதப் பயிற்சிக்குப் பிறகு ராமா் கோயிலில் பணியமா்த்தப்படுவாா்கள். பயிற்சியில் ஈடுபடுபவா்களுக்கு இலவச உணவு, தங்குமிடம் வசதிகள் செய்து கொடுக்கப்படும். உதவித்தொகையாக மாதம் ரூ.2,000 வழங்கப்படும்.

தோ்வாகாதவா்களுக்கு நோ்காணலில் பங்கேற்ற்கான சான்றிதழ் வழங்கப்படும். வருங்காலத்தில் ராமஜென்மபூமி கோயில் பூஜாரி பணிக்கு ஆட்கள் தேவைப்படும் சூழலில், அவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றனா்.

அயோத்தி ராம ஜென்மபூமி கோயிலில் வரும் ஜனவரி 22-ஆம் தேதி மூலவா் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.