மலையே சிலையானால்...
அமெரிக்க நாட்டின் மாகாணங்களில் மிகவும் தொன்மையும் சிறப்பும் வாய்ந்ததாகத் திகழ்கிறது, தெற்கு டகோட்டா.

அமெரிக்க நாட்டின் மாகாணங்களில் மிகவும் தொன்மையும் சிறப்பும் வாய்ந்ததாகத் திகழ்கிறது, தெற்கு டகோட்டா. இங்குள்ள நிலப்பரப்புகள், உயர்ந்த மரங்களுடன்கூடிய மலைகள், பசுமையான புல்வெளிகள், 'பைசன்' என அழைக்கப்படும் காட்டு எருதுகள் சிறப்புமிக்கவை.
அமெரிக்க நாட்டுக்கு அண்மையில் சென்றிருந்தேன். அப்போது எனது மகன், அவரது குடும்பத்துடன் தெற்கு டகோட்டாவுக்கு சுற்றுலா சென்றிருந்தோம். அங்கு 'மவுண்ட் ரஷ்மோர்' என்ற வரலாற்றுச் சின்னத்தைப் பார்த்தோம்.
அமெரிக்க நாட்டின் வரலாற்றை எடுத்துக் கூறும் வகையிலான அந்த வரலாற்றுச் சின்னம் 'கருப்பு மலை' என அழைக்கப்படுகிறது. 'டோனே ராபின்சன்' என்ற வரலாற்று ஆய்வாளரின் எண்ணத்தில் இந்தத் திட்டம் உருவானது.
இந்த மலையின் உச்சியில் ஜார்ஜ் வாஷிங்டன், தாமஸ் ஜெபர்சன், தியோடர் ரூஸ்வெல்டு, ஆபிரகாம் லிங்கன் ஆகிய நான்கு அதிபர்களின் முகங்கள் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. சிற்பங்கள் 60 மீ. உயரத்துக்குச் செதுக்கப்பட்டு, கம்பீரமாய் காட்சி அளிக்கிறது. இந்தப் பணிகள் 1927-ஆம் ஆண்டு துவக்கப்பட்டு, 1941-ஆம் ஆண்டு முடிவடைந்துள்ளது.
ஒவ்வொரு முகமாகப் பணியை முடித்து நிறைவு செய்துள்ளனர். 1934-ஆம் ஆண்டில் வாஷிங்டன், 1936-இல் தாமஸ் ஜெபர்சன், 1937-இல் ஆப்ரகாம்லிங்கன், 1939-இல் தியோடர் ரூஸ்வெல்ட் ஆகியோர் முக வடிவங்கள் வடிவமைக்கப்பட்டு, பணி முடிவுற்றது.
இந்தப் பணியைத் துவக்கிய சிற்பி கட்úஸான் போர்கலம் 1941-ஆம் ஆண்டு காலமானதைத் தொடர்ந்து, அவர் மகன் லிங்கன் மீதமுள்ள பணிகளை நிறைவு செய்தார்.
இந்த வரலாற்றுச் சின்னத்தை அமைப்பதில் பங்கு கொண்ட நிறுவனங்கள், நிதியுதவி அளித்தவர்கள், பணியாற்றிய சிற்பிகள் - தொழிலாளர்களின் பெயர்களும் கல்வெட்டாய் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த வரலாற்றுச் சின்னத்தை 2004-ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
மலைக்கு முன்பாக உள்ள நடைபாதையின் இருபுறத்தையும் மாகாணங்களின் கொடிகள் அலங்கரிக்கின்றன. இந்தச் சின்னத்தைக் காண வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அமைதியாக அமர்ந்து கண்டு மகிழ அனைத்து வசதிகளையும் தெற்கு டகோட்டா மாகாண நிர்வாகம் செய்துள்ளது.இந்தச் சிற்பங்களைக் காணும்பொழுது, தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் இயற்கையாய் அமைந்த குன்றுகளை, கற்பாறைகளை, கோயில்களாகவும், தேர் போன்ற வடிவங்களாகவும், சிற்பங்களாகவும் வடிவமைத்த பல்லவ மன்னர்களை நினைக்கத் தோன்றுகிறது.
இயற்கையாய் அமைந்த கற்பாறைகளில், குன்றுகளில் சிற்பங்களாகவும், வடிக்க வேண்டும் என்ற எண்ணம் உலகளவில் காணப்படுவது மனிதர்களின் எண்ணங்களின் கற்பனை ஒற்றுமையை எடுத்துக்காட்டுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

