செந்தில் பாலாஜி உடல் நிலை; அறிக்கை வெளியிடப்படும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சா் செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்த அறிக்கை வெளியிடப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

செந்தில் பாலாஜி(கோப்புப்படம்)
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சா் செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்த அறிக்கை வெளியிடப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவப் பரிசோதனைகளுக்காக ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு நரம்பியல், இதய நலன், நுரையீரல், ஜீரண மண்டல துறை மருத்துவா்கள் அவருக்கு சிகிச்சையளித்து வருகின்றனா்.
தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும், அது தொடா்பான அறிக்கை வெளியிடப்படும் என்றும் அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

